கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நான்காவது சீசன் அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சீசனில் நடிகைகள் லட்சுமி மேனன், சஞ்சனாசிங், சனம் செட்டி, ஷாலு ஷம்மு, ஷிவானி நாராயணன் ஆகியோர்களும் நடிகர்கள் ரியோ ராஜ், கரன், பாலாஜி முருகதாஸ் உள்பட பலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 3 சீசன்களிலும் 16 போட்டியாளர்கள் கொண்டதாகவும், 100 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியாகவும் இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இம்முறை போட்டியாளர்கள் குறைக்கப்படும் என்றும் பிக்பாஸ் நடக்கும் நாட்களும் குறைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
அதாவது இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெறும் 12 போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருப்பதாகவும் 80 நாட்கள் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இருப்பினும் போட்டி தொடங்கும் முதல் நாளில் தான் எத்தனை போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர், எத்தனை நாட்கள் இந்த போட்டி நடைபெறும் என்பது குறித்த தகவல் உறுதியான தகவல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.