Tamilசினிமா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கும் நடிகர் சிம்பு

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே நிரம்பியுள்ளது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் ஐந்து சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த பிக்பாஸ் அல்டிமேட் நேரடியாக ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிப்பரப்பாகிறது, இதனையும் நடிகர் கமல் தொகுத்து வழங்கி வந்தார்.

பல போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 21-ஆம் தேதியன்று பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத பிக்பாஸ் ரசிகர்கள், அடுத்து இதனை தொகுத்து வழங்கப்போவது யார் என முணுமுணுத்து வந்தனர். இந்நிலையில் இதனை தொகுத்து வழங்க நடிகர் சிம்பு களம் இறங்கியுள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. சிம்பு இடம்பெற்றுள்ள புரோமோ வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது.