X

பிக் பாஸ் சீசன் 6 – போட்டியாளர்களின் முழு விவரம்

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ்டைட்டிலை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும் டைட்டிலை கைப்பற்றினர். பிக்பாஸ் 6-வது சீனன் வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன்-6 தொடக்க நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில் மொத்தம் 20 போட்டியாளர்கள் வீட்டின் உள்ளே சென்றுள்ளனர். இதில் கலந்துக் கொண்ட பிரபலங்களின் பட்டியல் பின்வருமாறு, தொகுபாளினியும் நடிகையுமான மகேஸ்வரி, நகைச்சுவை நடிகர் அமுதவாணன், சீரியல் நடிகை ரஷிதா மஹாலக்ஷ்மி, நடன இயக்குனரும் நடிகருமான ராபர்ட் மாஸ்டர், நடன இயக்குனரும் சீரியல் நடிகையுமான ஷாந்தி, டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து, சீரியல் நடிகர் அசீம், பத்திரிகையாளர் விக்ரமன், தொகுப்பாளர் ஜனனி, ராப் பாடகர் ஏடிகே, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி.

சீரியல் நடிகர் மணிகண்டன், மாடல் ஷிரினா, சீரியல் நடிகை ஆயிஷா, டிரான்ஸ் மாடல் சிவன் கணேசன், பாடலாசிரியரும் ராப் பாடகருமான அசல், தனலட்சுமி, ஆடை வடிவமைப்பாளர் நிவா, சீரியல் நடிகை குயின்சி, தொகுப்பாளர் கதிரவன் உள்ளிட்ட 20 நபர்கள் கலந்துக் கொண்டனர். இவர்களில் யார் அந்த பிக்பாஸ் டைட்டிலை தட்டிசெல்வார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.