தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. இதுவரை 2 சீசன்கள் முடிவுற்று, தற்போது 3-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் சில நாட்களில் இதன் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. தற்போது கவின், சேரன், சாண்டி, லாஸ்லியா, ஷெரின், தர்ஷன் மற்றும் முகின் ஆகியோர் இறுதிப் போட்டியில் உள்ளனர்.
தற்போது அடுத்த போட்டியின் தொகுப்பாளர் யாராக இருக்கும் என்று பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியானது. சரத்குமார், சூர்யா மற்றும் சிம்பு ஆகியோர் பெயர்கள் தொகுப்பாளர்களாக அடிபட்டது. இதில் சிம்பு தான் கண்டிப்பாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வந்தார்கள்.
இந்தச் செய்தி குறித்து நிகழ்ச்சி குழுவினர் கூறியதாவது:- “அடுத்த சீசனுக்கு கமல் தான் தொகுப்பாளர். வேறு யாரிடமும் நாங்கள் பேசவில்லை. வேறு யாரையும் தொகுப்பாளராகக் கொண்டு வரும் எண்ணமுமில்லை” என்று தெரிவித்தனர். இதன் மூலம் பிக் பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தமிழில் நடத்த விஜய் தொலைக்காட்சி 5 ஆண்டுகள் ஒப்பந்தம் போட்டுள்ளது. 3 ஆண்டுகளும் கமல்தான் தொகுத்து வழங்கினார். தற்போது 4-ம் ஆண்டுக்கும் கமல்தான் தொகுப்பாளர் என அந்நிறுவனம் உறுதி செய்திருப்பது நினைவு கூறத்தக்கது.