X

பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’

தாதா 87 என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி. இவர் அடுத்ததாக ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (PUBG) என்ற படத்தை இயக்கியுள்ளார்.

பொல்லாத உலகில் பயங்கர கேம் காமெடி திரில்லரான படம். இதில் தமிழ் பிக் பாஸ் சீசன் 2 புகழ் ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். பப்ஜிங்குற கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் க்ரைம் ப்ரான்ச் ஆபிஸராக நடிக்கிறார்.

படத்தோட கதையை பற்றி இயக்குனர் கூறுகையில், “பப்ஜி கேம் மாதிரி அஞ்சு பேரு ஒரு கேம் விளையாடுகிறார்கள். ஜெயிச்சவங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கு. அது (happy ending) அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது தான் படம். திரையில நடிக்காம ஒதுங்கி இருந்த சிறந்த பழைய நடிகர்களை நடிக்க வைக்கவும் வாய்ப்பிருக்கிறது’ என்றார்.

இவர் ஏற்கெனவே 87 வயது சாருஹாசன் மற்றும் ஐனகராஜ் அவர்களையும் நடிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த நடிகர் அம்சவர்தனை வைத்து பீட்ரு என்ற படம் இயக்கி வருகிறார்.