பிக் பாஷ் டி20 கிரிக்கெட் – சிட்னி தண்டர் வெற்றி

பிக் பாஷ் டி20 கிரிக்கெட் லீக்கில் நேற்று மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் சிட்னி தண்டர் – அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சி்ட்னி தண்டர் கேப்டன் ஷேன் வாட்சன் (68), சங்கா (30) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அடிலெய்டு களம் இறங்கியது. இங்க்ராம் 48 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், அந்த அணி 97 ரன்னில் சுருண்டது. இதனால் சிட்னி தண்டர் 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2-வது ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் – மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் பிரையன்ட் (44), மெக்கல்லம் (69), கிறிஸ் லின் (66) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது.

பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி களம் இறங்கியது. பிரிஸ்பேன் ஹீட் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 91 ரன்னில் சுருண்டது. இதனால் பிரிஸ்பேன் ஹீட் அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

3-வது ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் – பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்சர்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. பின்னர் 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெர்த் ஸ்கார்சர்ஸ் 18.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க பேட்ஸ்மேன் பான்கிராப்ட் ஆட்டமிழக்காமல் 87 ரன்களும், டர்னர் 30 பந்தில 60 ரன்களும் குவித்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools