பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய கமல்ஹாசன் – அடுத்த தொகுப்பாளர் விஜய் சேதுபதியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் மல்ஹாசன் திடீரென இம்முடிவை எடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ” 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்கள் பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். சினிமா பணிகள் காரணமாக, பிக் பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் அடுத்த தொகுப்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. முந்தைய சீசன்களில், கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அவருக்கு பதில் நடிகர் சிம்புவும், மற்றொரு எப்பிசோடில் ரம்யா கிருஷ்ணனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். அதனால், கமல் பிக்பாஸில் இருந்து விலகியதை அடுத்து நடிகர் சிம்பு பிக்பாஸ் 8 சீசனை தொகுத்து வழங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல், நடிகர் விஜய் சேதுபதியும் பிக்பாஸ் சீசன் 8 தொகுத்து வழங்க அதிகளவில் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 7 சீசனுக்கு பிறகு, பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் புதிய தொகுப்பாளர் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools