ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் – சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி பிரிஸ்பேன் ஹீட் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் பிரையன்ட் 28 பந்தில் 34 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த கேப்டன் கிறிஸ் லின் 55 பந்தில் 84 ரன்கள் விளாச பிரிஸ்பேன் ஹீட் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 165 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி சிக்சர்ஸ் அணி களம் இறங்கியது. கேப்டன் ஹென்ரிக்ஸ் 57 ரன்னும், அவெண்டானோ 30 ரன்னும், சில்க் 46 ரன்களும் விளாச சிட்னி சிக்சர்ஸ் அணி 19.3 ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் 165 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மெல்போர்ன் ஸ்டார்ஸ்.