X

பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது

பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட், டிஎஸ்-இஒ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் நாளை விண்ணில் பாய்கிறது. ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து நாளை மாலை 6 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்கிறது.

டிஎஸ்-இஓவுடன் சிங்கப்பூரின் என்இயு-சாட், ஸ்கூப் 1 ஆகிய செயற்கைக்கோள்களும் நாளை விண்ணில் நிலைநிறுத்தப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் அதிக தெளிவுடன் ஒரே நேரத்தில் பலகோணங்களில் பூமியை படம் எடுக்கும் திறனுடையது.

சி-53 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 25 மணிநேர கவுன்ட்டவுன் இன்று மாலை 5 மணிக்கு துவங்குகிறது.