பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். இவர் தற்போது ஆர்யாவை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். குத்துச்சண்டை வீரர்களை பற்றிய படம் என்பதால் அதற்காக தீவிர உடற்பயிற்சி செய்து உடல் அமைப்பை மாற்றி இருக்கிறார் ஆர்யா.

இப்படத்தில் வில்லனாக இயக்குனர் மகிழ்திருமேனி நடித்துள்ளார். மேலும் சந்தோஷ் பிரதாப், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி இப்படத்திற்கு சார்பட்டா பரம்பரை என பெயரிடப்பட்டுள்ளது. பர்ஸட் லுக் போஸ்டரில் ஆர்யா பாக்சிங் ரிங்கிற்குள் நின்றபடி போஸ் கொடுத்துள்ளார். போஸ்டரை பார்த்த ரசிகர்கள், மரண மாஸாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools