பா.ம.க நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் வேடத்தில் நடிக்கும் சரத்குமார்

பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் சில இயக்குனர்களின் படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் சேரன் பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கைக் கதையை திரைப்படமாக இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ராமதாஸாக நடிகர் சரத்குமார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவர் ராமதாஸ் வாழ்க்கை படத்தில் அவரது இளம் வயது நிகழ்வுகள், டாக்டராக பணி செய்து கொண்டே பின்தங்கிய வன்னிய சமுதாய மக்களின் ஏழ்மை நிலையை அகற்றவும், கல்வி, வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்கவும், தனி ஒதுக்கீடு பெறவும் போராட்டங்கள் நடத்தியது மற்றும் அரசியல் கட்சி தொடங்கியது உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் சேரன் கன்னட நடிகர் சுதீப் நடிக்கும் படத்தைத் தமிழ், கன்னடத்தில் இயக்குகிறார். அதை முடித்துவிட்டு மருத்துவர் ராமதாஸ் வாழ்க்கைக கதையை இயக்குவார் என்றும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil cinema