பா.ஜ.க-வை எதிர்க்க காங்கிரஸை வலுப்படுத்த வேண்டும் – அதிருப்தி தலைவர்கள் கருத்து

ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், அந்த 5 மாநில கட்சி தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், ஜி-23 என்ற காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. டெல்லியில் உள்ள மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் உள்ளவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், கூட்டத்துக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி தலைவர்கள் கூட்டாக வெளியிட்டனர். அதில், கட்சியின் அனைத்து மட்டங்களிலும் அனைவரையும் உள்ளடக்கிய கூட்டுத்தலைமையே ஒரே தீர்வு. 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி உடன்பாடு கொள்ள வேண்டும். பா.ஜ.க.வை எதிர்க்க காங்கிரசை வலுப்படுத்துவது அவசியம் என தெரிவித்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools