பா.ஜ.க-வில் இருந்து விலகிய முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸில் இணைந்தார்
கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட பா.ஜனதாவில் சீட் கிடைக்காததால் கடும் அதிருப்தி அடைந்த முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். பா.ஜ.க.வில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்தார்.
இதையடுத்து ஜெகதீஷ் ஷெட்டர் இன்று காங்கிரசில் சேர உள்ளார் என்றும், உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் அவர் காங்கிரஸ் வேட்பாளராக நிற்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகின.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார், சித்தராமையா முன்னிலையில் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் இன்று இணைந்தார். ஜெகதீஷ் ஷெட்டருக்கு காங்கிரஸ் தரப்பில் ஹூப்ளி தார்வாட் மத்திய தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.