பா.ஜ.க-வில் இருந்து திடீரென்று விலகிய நடிகை கெளதமி

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் கவுதமி. நடிகை கவுதமி பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பான கடிதங்களை பா.ஜ.க. தலைமைக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வில் உள்ள அழகப்பன் தனது சொத்துக்களை ஏமாற்றி விட்டார் என குற்றம் சாட்டியுள்ளார். கடந்த மாதம் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை கவுதமி இவர்மீது புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools