பா.ஜ.க-வில் இணைந்தார் நடிகர் ராதாரவி!
திமுகவில் இருந்த நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
இதனால் கடும் அதிருப்தியில் இருந்த ராதாரவி, கடந்த ஜூன் மாதம் அதிமுகவில் இணைந்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
அதிமுகவில் சேர்ந்து 6 மாதமே ஆன நிலையில் இப்போது அந்த கட்சியில் இருந்தும் விலகிய ராதாரவி, இன்று திடீரென பாஜகவில் இணைந்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்த பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் தனனை பாஜகவில் இணைத்துக்கொண்டுள்ளார்.