X

பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் நிலங்களை கைப்பற்றுவதற்கான சட்டம் இயற்றும் – அகிலேஷ் யாதவ் பேச்சு

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராபர்ட்ஸ்கஞ்ச் மக்களவை தொகுதியின் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் சோட்டேலால் கர்வாருக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-

பா.ஜனதா தலைவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வாக்கு கேட்கிறார்கள். அதே தலைவர்கள் கருப்பு சட்டங்களை (விவசாயிகள் தொடர்பான மூன்று சட்டங்கள்) கொண்டு வந்தவர்கள் என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த கருப்பு சட்டங்கள் விவசாயிகள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்திய பிறகு திரும்பப் பெறப்பட்டது. கருப்பு சட்டங்கள் திரும்பப் பெற்ற போதிலும் நாம் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதேபோல் சட்டங்களை  கொண்டு வந்து விவசாயிகள் மற்றும் பழங்குடியினரின் நிலத்தை பறித்து விடுவார்கள்.

இந்தத் தேர்தல் நம்முடைய எதிர்காலத்தின் பாதுகாப்பை பற்றியது. அதே நேரத்தில் இந்த தேர்தல் நம்முடைய அரசியலமைப்பு பாதுகாப்பு பற்றியது. அது நமக்கு மரியாதை கொடுக்கக் கூடியது. நமது உரிமை பாதுகாக்கக் கூடியது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை மக்கள் இலவச மாவு பெறுவார்கள். மொபைல் டேட்டே இலவசமாக வழங்கப்படும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.