பா.ஜ.க பிரமுகரை விடுவிப்பதில் காலதாமதம் – மேற்கு வங்காள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியை மிகவும் விகாரமாக சித்தரித்து சில நாட்களாக பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவியது.

இந்த புகைப்படத்தை பகிர்ந்ததாக பா.ஜ.க. இளைஞரணியான யுவ மோர்ச்சாவை சேர்ந்த ஹவுரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா சர்மா என்ற பெண்ணை தாஸ்நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 14 நாள் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, பிரியங்கா சர்மாவை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் அவரது வழக்கறிஞர் என்.கே.கவுல் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.

இந்நிலையில், பா.ஜ.க. இளைஞரணி பிரமுகரை விடுவிக்க தாமதப்படுத்திய மேற்கு வங்காளம் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரியங்கா ஷர்மாவின் வழக்கறிஞர் தாக்கல் செய்து மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிமன்றம், பா.ஜ.க. பிரமுகரை விடுவிப்பதில் கால தாமதம் செய்வது ஏன் என மாநில அரசுக்கு கேள்வி எழுப்பியது, அத்துடன் தனது கண்டனத்தையும் தெரிவித்தது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools