X

பா.ஜ.க தலைவர் அமித்ஷா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ‌ஷா நாடாளுமன்ற தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார். மாநிலம் மாநிலமாக சென்று அவர் தேர்தலை எதிர்கொள்ள கட்சியினரை சந்தித்து வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டது. அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் நலமாக இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

இதுகுறித்து பா.ஜனதா மாநிலங்களவை உறுப்பினரும், ஊடகப் பிரிவுத் தலைவருமான அனில் பலூனி ‘‘பன்றிக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக பா.ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், அவர் பூரண உடல் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார். அமித் ஷாவுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பூரண குணம் அடைந்து விட்டதால் அமித் ‌ஷா நாடாளுமன்ற தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட உள்ளார்.