பா.ஜ.க கூட்டணி சரணடைந்த கூட்டணி – எம்.பி பிரியங்கா திரிவேதி பேச்சு
உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியின் எம்.பி.யான பிரியங்கா திரிவேதி, பா.ஜனதாவின் கூட்டணி கட்டாயப் படுத்தப்பட்ட மற்றும் சரணடைந்த கூட்டணி என விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பிரியங்கா சதுர்வேதி கூறுகையில் “அவர்களுடைய கூட்டணி (பா.ஜனதா உடைய) கட்டாயப் படுத்தப்பட்ட கூட்டணி. ஏனென்றால் கொடுங்கோன்மையை ஆதரித்தால் மட்டுமே வெற்றிபெற முடியும் என எல்லோருக்கும் தெரியும். அவர்கள் (பா.ஜனதா) நாடு, ஜனநாயகம், அரசியலமைப்பு ஆகியவற்றை புறந்தள்ளியுள்ளனர்.
பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா முன்னிலையில், அவர்களால் ஏதும் பேச முடியாது. எந்தவிதமான முடிவுகளையும் எடுக்க முடியாது. அவர்களுடைய எந்த திட்டத்தையும் முன்வைக்க முடியாது என்று அவர்களுக்கு தெரியும். இதுதான் சரணடைந்த கூட்டணி.
இந்தியா கூட்டணி 26 கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி. அங்கே பல்வேறு கருத்துகள் இருக்கலாம். ஆனால், இதுதான் ஜனநாயத்தின் அழகு. பல்வேறு கருத்துகள் குறித்து ஆலோசிக்கப்படும். முடிவுகள் விரைவாக எடுக்கப்பட்டு, நாட்டின் அரசியலமைப்புக்காக, மக்களுக்காக மிகவும் வலிமையாக போராடி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.