பா.ஜ.க ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும் – முதல்வர் குமாரசாமி காட்டம்

கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:

பாராளுமன்ற தேர்தலில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. நல்லாட்சி நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

பாராளுமன்ற தேர்தலையும் நாங்கள் கூட்டணி மூலமே எதிர்கொள்கிறோம். சில தொகுதிகளில் நிர்வாகிகளிடையே சிறிய அளவில் பிரச்சினைகள் உள்ளது. அதை சரிசெய்து கொள்வோம். கர்நாடகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே எங்களின் இலக்கு.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் பெங்களூருவில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் பா.ஜனதாவினர் கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்யவில்லை. அங்கிருந்து வெளியேற்றினர்.

பிற கட்சிகளுக்கு மரியாதை கொடுக்க பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கற்றுக்கொள்ள வேண்டும். அதை விடுத்து ஒரு கட்சியின் தலைவருக்கு எதிராக பேசுவதை ஊக்குவிப்பதை அவர் நிறுத்த வேண்டும். பா.ஜனதாவினர் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news