Tamilசெய்திகள்

பா.ஜ.கவை தோற்கடிக்க மதச்சார்பற்ற கட்சிகளிடையே ஒத்துழைப்பு அவசியம் – காங்கிரஸ் கருத்து

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஐக்கிய முற்போக்கு கூட்டணியே தற்போது இல்லை என அதிரடியாக தெரிவித்தார். மம்தா பானர்ஜியின் கருத்துக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், பா.ஜ.கவை தோற்கடிக்க மதச்சார்பற்ற கட்சிகளிடையே ஒத்துழைப்பு அவசியம் தேவை என காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்தது.

இதுதொடர்பாக மாநிலங்களவை காங்கிரஸ் துணை தலைவர் ஆனந்த் சர்மா கூறுகையில், பா.ஜ.கவை தோற்கடிக்க மதச்சார்பற்ற, முற்போக்கு, ஜனநாயக அரசியல் கட்சிகளிடையே பரவலான புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பு நிலவுவது அவசியம். அது மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும். இதற்கான தேசிய கூட்டு முயற்சியின் மைய தூணாக காங்கிரஸ் தொடர்ந்து செயல்படும் என தெரிவித்துள்ளார்.