பா.ஜ.கவினர் உடனான மோதல் விவகாரம் – திமுக வேட்பாளர் விளக்கம்

கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் பிரசாரத்தின்போது மோதல் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பாஜக வேட்பாளர் அண்ணாமலை இரவு 10 மணியை தாண்டி பிரசாரம் மேற்கொண்டதை திமுகவினர் கேள்வி எழுப்பினர். இதையடுத்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தினர். இரவு 10.40 மணிக்கு பிரசாரம் செய்துள்ளனர். இது நியாயமா?.

எங்கள் புகாரின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. சட்ட விதிகளை மீறி செயல்பட்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

தோல்வி பயம் பாஜகவினர் முகத்தில் நன்றாக தெரிகிறது. கல்லூரி மாணவர்களை வைத்து பாஜகவினர் பிரசாரம் மேற்கொள்கின்றனர். தோல்வி பயத்தால் வேறு ஏதேனும் இடையூறு செய்ய திட்டமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools