Tamilசினிமா

பா.இரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் கதாப்பாத்திரம் அறிமுகம்

முன்னணி இயக்குனரான பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’. இப்படம் முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வந்தது. ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ‘டான்ஸிங் ரோஸ்’ கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இரண்டாம் போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் இசையமைப்பாளர் தென்மா இசையமைத்துள்ளார்.

இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘நட்சத்திரம் நகர்கிறது’ கதாபாத்திரங்களை நாளை மாலை 6 மணிக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக பா. ரஞ்சித் வித்தியாசமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.