பாஸ்ட்டேக் பெறுவதற்கான கால அவகாசம் ஜனவரி 15ஆம் தேதி வரை நீட்டிப்பு

சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பாஸ்ட்டேக் எனும் மின்னணு அட்டை முறை அமல்படுத்தப்பட உள்ளது.

இதன்படி வாகன உரிமையாளர்கள் தேவைக்கேற்ப கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளிலும் பாஸ்ட்டேக் முறை அமல்படுத்தப்பட உள்ளது.

டிசம்பர் 1-ம் தேதி முதல் இந்த பாஸ்ட்டேக் முறை கட்டாயம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், ஏற்கனவே 15 நாள்கள் அவகாசம் நீடிக்கப்பட்டது.

இந்நிலையில், பாஸ்ட்டேக் மின்னணு அட்டை பெறுவதற்கான கால அவகாசத்தை மேலும் ஒரு மாதம், அதாவது ஜனவரி 15-ம் தேதி வரை நீடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news