ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று அசத்திய இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பின்லாந்தில் நடைபெறும் பாவோ நுர்மி போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த முறை அவர் 85.97 மீட்டர்கள் ஈட்டியை எறிந்தது அவருக்கு தங்க பதக்கத்தை பெற்று தந்துள்ளது.
பாவோ நுர்மி போட்டியின் முதல் சுற்றில் நீரஜ் சோப்ரா ஈட்டியை 83.62 மீட்டர்கள் எறிந்தது, அவருக்கு முன்னிலையை ஏற்படுத்தி கொடுத்தது. பிறகு, நடைபெற்ற இரண்டாம் சுற்றில் பின்லாந்து வீரர் ஆலிவர் ஹெலாண்டர் 83.96 மீட்டர்களுக்கு ஈட்டியை எறிந்து முன்னிலை பிடித்தார்.
அடுத்து நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி சுற்றில் நீரஜ் அபாரமாக வீசியதில் ஈட்டி 85.97 மீட்டர்கள் தூரத்திற்கு பாய்ந்தது. இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, ஆலிவர் ஹெலாண்டரை வீழ்த்தி நீரஜ் சோப்ராவுக்கு தங்க பதக்கத்தையும் உறுதிப்படுத்தியது.
இந்த போட்டியில் தங்கம் வென்றுள்ளதை அடுத்து வரவிருக்கும் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலும் நீரஜ் சோப்ரா சிறப்பான போட்டியை ஏற்படுத்தி, மீண்டும் பதக்கத்தை வெல்வார் என்ற நம்பிக்கையை அதிகப்படுத்தி இருக்கிறது.