Tamilசெய்திகள்

பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பூனையை காப்பாற்ற முயற்சித்த 5 பேர் பலி!

மகாராஷ்டிராவின் அகமத்நகர் மாவட்டத்தில் பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பூனையை காப்பாற்ற உள்ளே குதித்த 5 பேர் மரணமடைந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

கிணற்றுக்குள் விழுந்த பூனையை மீட்கும் முயற்சியில் 5 பேரும் ஒருவர் பின் ஒருவராக கிணற்றில் குதித்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பூனையை மீட்க கிணற்றில் இடுப்பில் கயிற்றை கட்டிக்கொண்டு இறங்கிய 6வது நபர் காவல்துறையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அது விலங்குகளின் கழிவுகளை சேமித்து பயோகேஸ் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கிணறு என போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.