X

பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராயுடன் மூன்றாவது முறையாக இணையும் நடிகர் தனுஷ்

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தனுஷ் மூன்றாவது முறையாக பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு முன்பு ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் ‘ராஞ்சனா’ மற்றும் ‘அட்ராங்கி ரே’ படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தனுஷ்-ஆனந்த் எல் ராய் கூட்டணியில் உருவாகும் படம் காதல் கதையம்சம் கொண்ட படமாகவும் விமானப்படை பின்னணியில் இப்படம் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தனுஷ் விமானப்படை பின்னணியில் நடிக்கவுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Tags: tamil cinema