பாலியல் வீடியொ சர்ச்சை – கே.டி.ராகவனுக்கு ஆதரவாக பேசிய சீமான்

தமிழ்நாடு பா.ஜ.க.வின் பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவன், ஊடக விவாதங்களின் மூலம் நன்கு அறியப்பட்டவர். தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் பதவிக்கான பெயர் அடிபடும்போதெல்லாம், ராகவனின் பெயரும் அதில் இடம்பெறும். அவர் தொடர்பான பாலியல் வீடியோ காட்சி ஒன்று வலைதளங்களில் பரவியது. இதனால் பொதுச்செயலாளர் பதவியை கே.டி. ராகவன் ராஜினாமா செய்தார். இதுகுறித்து விசாரணை நடத்த பா.ஜனதா ஒரு குழு அமைத்துள்ளது.

கே.டி. ராகவன் பாலியல் விவகாரத்தில் சிக்கியது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீமான் பதில் அளிக்கையில், ‘‘அவருக்குத் தெரியாம படுக்கையறை, கழிப்பறையில் கருவியை வைத்து வீடியோவைப் பதிவு செய்ததுதான் சமூக குற்றம். படம் எடுத்தவரை கைது செய்து தெருவிற்கு இழுத்திருக்கணும். உலகத்தில் எங்கேயும் நடக்காத ஒன்றை அவர் செய்திருப்பதாக காட்டிக்கொண்டிருக்கிறீங்க…

சட்டசபையில் வைத்து ஆபாச படம் பார்த்ததை பார்த்தோம். அதுபோன்று செய்யக்கூடாது. அவர் தனிப்பட்ட அறையில் செய்ததை எடுத்து வைத்துவிட்டு, அவர் அப்படி பண்ணிட்டாரு, அவர் அப்படி பண்ணிட்டாருன்னா?. அது என்ன… கேடுகெட்ட சமூகமாக மாறிவிட்டதோ? என்ற பயம் வருகிறது. யார் யாரோடு பேசுறது, யாரு கிட்ட பேசுறாங்க என்பதை ஒட்டுக்கேட்கிறது, ஒட்டுக்கேட்டதை பதிவு செய்வது. அதை வெளியிடுவது. இதனால் என்ன சாதிக்க முடியும் என்று நினைக்கிறார்கள். என்ன வந்திர போகிறது’’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools