Tamilசினிமா

பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களை தாக்கிய நடிகை!

சல்மான் கான் நடித்த வீர் படம் மூலம் அறிமுகமானவர் ஜரீன் கான், தொடர்ந்து இந்தி சினிமாவில் கதாநாயகியாக நடித்து வரும் இவர் தமிழில் நகுல் நடித்த ‘நான் ராஜாவாக போகிறேன்’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

ஜரீன் கான் சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவுக்காக மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்துக்கு சென்றார். அவர் வருவதை முன்பே அறிவித்து இருந்ததால் கடை முன்பு ரசிகர்கள் திரண்டு இருந்தனர்.

கடையை திறந்து வைத்த ஜரீன்கான் கடையின் முன்புறம் வந்து சில நிமிடங்கள் ரசிகர்களை பார்த்து கைகாட்டிவிட்டு காரில் ஏற முயன்றுள்ளார். அப்போது ரசிகர்கள் அவர்மீது பாய்ந்ததோடு தொட்டு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜரீன் கான் தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றவர்களை பிடித்து தள்ளியதுடன், சிலரை அடித்துவிட்டார். நடிகை இந்த அளவுக்கு வேகத்துடன் தாக்கியதை சற்றும் எதிர்பார்க்காத அந்த நபர்கள் மிரண்டுவிட்டனர். பாலியல் தொல்லை கொடுக்க முயன்றவர்களை அடித்துவிட்டு ஒரு வழியாக தனது காரில் ஏறி சென்றார் ஜரீன்கான்.

இந்த சம்பவம் குறித்து அவர் டுவிட்டரிலும் தெரிவித்துள்ளார். ‘சில தவறான நபர்கள் என்னிடம் சில்மி‌ஷம் செய்ய முயன்றனர். நான் என்னுடைய பாணியில் தாக்கி பதிலடி கொடுத்து தப்பித்தேன்’ என்று கூறி உள்ளார். ஜரீன் கான் ரசிகர்களிடம் சிக்கி தாக்கிவிட்டு தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஜரீன் கான் துணிச்சலாக நடந்து கொண்டதை ரசிகர்கள் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *