X

பாலியல் கொடுமைக்கு ஆளான 5 வயது குழந்தை

உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. அந்த பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. அதன்பின்னரும் பல்வேறு இடங்களில் பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஹர்டோய் மாவட்டத்தில் 5 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது. ஹர்டோய் மாவட்டம் சாண்டிலா நகரில் 5 வயது குழந்தை டியூசன் படிக்க சென்ற இடத்தில், டியூசன் டீச்சரின் தம்பி, அந்த குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட எஸ்பி அனுராக் வாட்ஸ் தெரிவித்தார்.