பாலக்கோட் தாக்குதல் டிசைனில் புடவைகள் – சூரத்தில் தயாரிக்கப்படுகிறது

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படையினர் பாகிஸ்தானில் உள்ள பாலக்கோட்டில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வந்தனர். மேலும் இந்த தாக்குதலில் இந்திய விமானி அபிநந்தன் சிறை பிடிக்கப்பட்டார். 3 தினங்களுக்குப் பின்னர் பாகிஸ்தான் அரசால் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதனையடுத்து அவரது வீரத்தை பாராட்டும் விதமாக, விளையாட்டு வீரர்கள், திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களிலும், நேரடியாக சென்றும் வரவேற்றனர்.

இந்நிலையில், புடவைகளில் தனி கலையினை பிரதிபலிக்கும் சூரத் நகரில் உள்ள ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஒன்று , இந்திய விமானப்படையினரின் பாலக்கோட் தாக்குதல், விமானப்படை வீரர்கள், பிரதமர் மோடி, இந்திய விமானப்படை விமானி அபிநந்தன், இந்திய போர் விமானம் ஆகியவற்றின் புகைப்படங்களுடன், சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனும் பெயருடன் அச்சிடப்பட்டு பிரத்யேகமான புடவையை வடிவமைத்துள்ளது.

இதையடுத்து இந்த புடவை தற்போது பொது மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த புடவை 4 மணி நேரத்தில் வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools