நக்கலும் நையாண்டித்தனமுமாக பேசுவதில் வல்லவர் பார்த்திபன். புதிய பாதை மற்றும் ஹவுஸ் ஃபுல் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார். இவர் இயக்கிய புதிய பாதை சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றது.
இதுவரை பார்த்திபன் 15 படங்களை இயக்கியுள்ளார்., 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். புதுவிதமான படங்களை இயக்குவதும் அதில் நடிப்பதும் முயற்சி செய்வதும் இவரின் வழக்கம். பார்த்திபன் இயக்கத்தில் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ திரைப்படம் 2019ஆம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்தில் பார்த்திபன் மட்டுமே படம் முழுக்க நடித்திருப்பார். இதில் இந்திய சினிமாவில் ஒரு புது முயற்சியாகும். இப்படத்தை இயக்கி நடித்தற்காக மிக பெரிய பாராட்டை பெற்றார் பார்த்திபன்.
பின் 2022 ஆம் ஆண்டு இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி நடித்து இருந்தார். இத்திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக ‘டீன்ஸ்’ படத்தை இயக்கிருக்கிறார். இத்திரைப்படம் ஒரு திகில் திரில்லர் படமாக அமைந்துள்ளது. படத்தின் டீசர் சென்ற வாரம் வெளியிடப்பட்டது.
படத்தின் டிரெயிலர் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை இயக்குனர் மணிரத்னம் அவரின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடுகிறார்.