X

’பார்ட்டி’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. நடிகர் ஷியாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

முன்னதான வெளியான `பார்ட்டி’ படத்தின் டீசர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படம் விரைவில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.

வெங்கட் பிரபு விரைவில் சிம்புவை வைத்து `மாநாடு’ என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.