Tamilசெய்திகள்

பார்க்கிங் பணிக்கு குவிந்த பொறியியல் பட்டதாரிகள்

சென்னை மாநகராட்சி சார்பில் அண்ணாநகர், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம் உள்பட முக்கியமான பகுதிகளில் 2 ஆயிரம் பார்க்கிங் பகுதிகளை உருவாக்கி பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

டிஜிட்டல் முறையில் வாகன ஓட்டிகள் அதற்கான செயலிகள் மூலம் எங்கு பார்க்கிங் வசதி இருக்கிறது. குறிப்பிட்ட பார்க்கிங் பகுதியில் இடம் இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு வாகனங்களை அங்கு பார்க்கிங் செய்யலாம்.

இந்த பார்க்கிங் ஸ்பாட்டுகளை தனியார் நிர்வகிப்பார்கள். கட்டணத்தையும் ஆன்-லைனில் செலுத்த முடியும். முதற்கட்டமாக 222 பகுதிகளில் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக பார்க்கிங் உதவியாளர் வேலைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது.

இந்த மாதிரி வேலைக்கு ஓய்வு பெற்றவர்கள், அதிலும் எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்களே வருவார்கள். ஆனால் தற்போது 1400 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 70 சதவீதம் பேர் பட்டதாரிகள் மற்றும் என்ஜினீயரிங் படித்தவர்கள். வேறு வேலைகள் கிடைக்காததால் இந்த வேலைக்கு விண்ணப்பித்ததாக கூறினார்கள்.

சிவில் என்ஜினீயரிங் பட்டதாரி வாலிபர் ஒருவர் கூறும்போது, ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக வேலைவாய்ப்பு இல்லை. எனவே இந்த வேலைக்கு வந்தேன் என்றார்.

10-ம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட வேலைக்கு பட்டதாரிகள் வந்து குவிவதன் மூலம் வேலையில்லா திண்டாட்டம் இளைஞர்கள் மத்தியில் அதிக அளவில் இருப்பதை பிரதிபலிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *