பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், கிரீஸ் வீரர் சிட்சிபாசுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-3, 7-6 (7-3) என்ற செட்களில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் அரையிறுதியில் ஜோகோவிச் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டியுடன் மோதுகிறார்.