பாராளுமன்ற வளாகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் – நேரில் பார்வையிட்ட ஓம் பிர்லா

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் 31-ம் தேதி தொடங்குகிறது. முதல் கட்டமாக பிப்ரவரி 11-ம் தேதியுடன் முடிவடைகிறது. 2-வது கட்டமாக மார்ச் 14-ல் தொடங்கி, ஏப்ரல் 7-ம் தேதி முடிவடைகிறது.

சமூக இடைவெளியை பின்பற்ற வசதியாக மக்களவையும், மாநிலங்களவையும் தனித்தனி நேரங்களில் நடக்கின்றன.

இந்தநிலையில், பாராளுமன்ற வளாகத்துக்கு சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று வந்தார். அங்கு அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். மக்களவை, மைய மண்டபம் மற்றும் இதர இடங்களைப் பார்வையிட்டார்.

கூட்டத் தொடர் நடக்கும்போது, கொரோனா வழிகாட்டுதல்படி எம்.பி.க்கள், பத்திரிகையாளர்கள், ஊழியர்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பத்திரிகையாளர் மாடம், நடைபாதை, மைய மண்டபம் ஆகியவற்றை தூய்மையாக பராமரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools