பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை – பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை

பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. நாடு முழுவதிலும் துவக்கம் முதலே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி இருந்தது.

தமிழகத்தில் திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. துத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி, சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள கொ.ம.தே. கட்சியின் ஈஸ்வரன், பெரம்பலூர் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர், கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளர் கவுதம் சிகாமணி, அரக்கோணம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன், ஓசூர் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் முன்னிலை பெற்றனர்

வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித் ஷா, காசியாபாத்தில் வி.கே.சிங் (பாஜக) ஆகியோர் முன்னிலை பெற்றனர். ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளர் ஆசம் கானை விட பாஜக வேட்பாளர் ஜெயப்பிரதா பின்தங்கினார். போபால் தொகுதியில் சாத்வி பிரக்யாவைவிட காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் பின்தங்கினார்.

வடமேற்கு டெல்லியில் பாஜக வேட்பாளர் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் முன்னிலை பெற்றார். இதேபோல் கோரக்பூரில் பாஜக வேட்பாளர் ரவி கிஷன், அனன்சோல் தொகுதியில் பாஜக வேட்பாளர் பாபுல் சுபிரியோ முன்னலை பெற்றார். முசாபர்நகரில் தற்போதைய பாஜக எம்பி சஞ்சீவ் பால்யன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். பாட்னா சாகிப் தொகுதியில் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சத்ருகன் சின்கா பின்தங்கினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools