X

பாராளுமன்ற தேர்தல் – சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் பயணம்

பாராளுமன்ற தேர்தல் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முன்னிட்டு நாளை பொது அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சனி, ஞாயிறு என மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், வாக்கு அளிப்பதற்காக சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு நேற்று முதலே படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில், மக்களவை தேர்தலை ஒட்டி போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். பொது மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து நேற்று 2,899 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

மேலும், சென்னையிலிருந்து பயணம் செய்ய இதுவரை 46,503 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.