பாராளுமன்ற தேர்தல் குறித்து திமுக, காங்கிரஸ் இடையே 28 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது

2024 மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் குழு, தொகுதி பங்கீடு, கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை என தேர்தல் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.- காங்கிரஸ் இடையே வருகிற 28-ந்தேதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர், காங்கிரஸ் கமிட்டி குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news