பாராளுமன்ற தேர்தல் – இன்று நடைபெற்ற 2ம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது

இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாக்காளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர். அதன்படி, காலை 9 மணி நிலவரப்படி 11.1 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 25.1 சதவீதமும், 1 மணி நிலவரப்படி 40 சதவீதமும், 3 மணி நிலவரப்படி 50.03 சதவீதமும், 5 மணி நிலவரப்படி 64 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. 2ம் கட்ட தேர்தலுக்காக 1.67 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 6 மணிக்கு முன், வாக்குச்சாவடி வந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, 3ம் கட்ட வாக்குப்பதிவு மே 7ம் தேதி நடைபெறுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools