Tamilசெய்திகள்

பாராளுமன்ற தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு – 13 மாநிலங்களில் 61.45 சதவீதம் வாக்குகள் பதிவு

பாராளுமன்ற தேர்தலில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நாட்டின் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமுடன் வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று ஆர்வமுடன் வாக்களித்தனர். மாலை வாக்குப்பதிவுகள் முடிந்த நிலையில், நேற்றிரவு 8 மணி நிலவரப்படி 61.45 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில், நேற்று இரவு 11 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, 13 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளில் மொத்தம் 64.4 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

மாநில வாரியாக விவரங்கள்:

அசாம் 81.61 சதவீதம்

பீகார் 58.18 சதவீதம்

சத்தீஸ்கர் 71.06 சதவீதம்

தாத்ரா, டயு மற்றும் டாமன் 69.87 சதவீதம்

கோவா 75.20 சதவீதம்

குஜராத் 58.98 சதவீதம்

கர்நாடகா 70.41 சதவீதம்

மத்திய பிரதேசம் 66.05 சதவீதம்

மகாராஷ்டிரா 61.44 சதவீதம்

உத்தரப்பிரதேசம் 57.34 சதவீதம்

மேற்கு வங்காளம் 75.79 சதவீதம்