பாராளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பாராளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. சொந்த ஊரில் இருந்து பலர் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் சொந்த ஊர் சென்று வாக்களிக்கவும், வாக்களித்த பின்னர் மீண்டும் வேலை செய்யும் இடத்திற்கு திரும்பவும் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி சென்னையில் இருந்து 17 மற்றும் 18-ந்தேதிகளில் 2,970 சிறப்பு பேருந்துகள் என 2 நாட்களுக்கு மொத்தம் 7154 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பிற ஊர்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 2 நாட்களுக்கு 3,060 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.

ஏப்ரல் 20 மற்றும் 21-ந்தேதிகளில் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பும் வகையில் 1825 சிறப்பு பேருந்துகள் என 2 நாட்களுக்கு மொத்தம் 6,009 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல் ஏப்ரல் 20 மற்றும் 21-ல் பிற ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு திரும்ப 2,295 பேருந்துகள் இயக்கப்படுகிறது. மொத்தம் 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools