X

பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? – கமல்ஹாசன் விளக்கம்

பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. தமிழகம் மற்றும் புதுவை மாநில நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்த முடிவு செய்தார். புதுவை மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பிறகு கமல்ஹாசன் அளித்த பேட்டி வருமாறு:-

பாராளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியிடுவேன். தேர்தலில் நான் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது பற்றியும் இப்போது முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. எல்லாவற்றையும் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். விரைவில் அறிவிப்பை வெளியிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags: tamil news