பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் இன்று ஜனாதிபதி உரையாற்றுகிறார்

17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாட்கள் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மூன்றாம் நாளான நேற்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. சபாநாயகராக பாஜக எம்பி ஓம் பிர்லா, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றார். இதையடுத்து அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், இன்று பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றுகிறார். அவரது உரையில், மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி உரை முடிவடைந்ததும் மாநிலங்களவை நடவடிக்கைகள் தொடங்கும்.

ஜூலை 4ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, ஜூலை 5-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பாராளுமன்ற கூட்டத் தொடர் ஜூலை 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools