X

பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி சிறப்பு உரை

விடுதலைக்கு முன்பு இந்த அவை இம்பீரியல் சட்ட சபையாக திகழ்ந்தது. வரலாற்று சிறப்புமிக்க பாராளுமன்ற கட்டிடத்திற்கு நாம் விடை கொடுக்கிறோம் விடுதலைக்குப் பிறகு நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்றமாக செயல்பட்டு வருகிறது பொன்மயமான வரலாற்று பயணத்தில் இந்த கட்டிடம் செயல்பட்டதை நினைவு கூர்வோம் ஒவ்வொரு இந்தியரின் வியர்வையாலும் பணத்தாலும் இந்த கட்டிடம் கட்டப்படுள்ளது சந்திரயான்-3 வெற்றி நாடு முழுவதும், உலகம் முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது பழைய பாராளுமன்றத்துடன் இணைந்துள்ள தருணங்களை நினைவு கூற வேண்டியது அவசியம்.

தொழில் நுட்பம், அறிவியல், புது யுகத்துடன் இணைந்த புதிய பாதை சந்திரயான் உடன் தொடங்கியிருக்கிறது. ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை இந்த அவை கட்டிக்காத்துள்ளது இந்த அவையின் தாக்கத்தால் நமது வலிமையை உலகிற்கு நிரூபித்துள்ளோம் ராஜேந்திர பிரசாத் தொடங்கி ராம்நாத் கோவிந்த் வரை ஜனாதிபதிகள் அவைக்கு வழிகாட்டியுள்ளனர் நேரு தொடங்கி மன்மோகன் சிங் வரை நாட்டின் வளர்ச்சியை நிலைநாட்ட உழைத்துள்ளனர். சாதாரண மக்களின் குரலை இந்த அவையில் எதிரொலிக்க செய்துள்ளனர். கொரோனா காலத்திலும் அவை நடவடிக்கைகளை முடக்க நாம் அனுமதிக்கவில்லை. நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகிய மூன்று பிரதமர்கள் பதவியில் இருந்தபோது உயிரிழந்தது சோகமான தருணம்.

நம்மை வழிகாட்டிய அனைவருக்கும் வணக்கம் செலுத்துவதற்கான வாய்ப்பு இது. நாடாளுமன்றத்தில் நேரு ஆற்றிய டிரைஸ்ட் வித் டிஸ்டினி உரையை நினைவு கூர்ந்து மோடி பாராட்டு இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்தவர் அம்பேத்கர். நேரு அமைச்சரவையில் சிறப்பாக பணியாற்றிவயர் அம்பேத்கர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பகத்சிங் குண்டு வீசய சம்பவம் இந்த அவையில் எதிரொலிக்கிறது. பசுமை திட்டத்திற்கான புதிய திட்டத்தை வகுத்தவர் லால் பகதூர் சாஸ்திரி வங்கதேச போர் வெற்றிக்கு வித்திட்ட இந்திரா காந்தி, அந்த பிரகடனத்தை இந்த அவையில் வாசித்தார்.

பொருளாதார சுமையில் இருந்து நாட்டை விடுவிக்க பாடுபட்டது நரசிம்மராவ் தலைமையிலான ஆட்சி ஒரே நாடு ஒரே வரி (ஜிஎஸ்டி) என்பதை ஏற்றுக் கொண்டது இந்த அவை வேற்றுமையில் ஒற்றுமையை காண்பிக்கும் விதமாக பல்வேறு சிறிய கட்சிகளின் உறுப்பினர்கள் இங்குள்ளனர் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டது இந்த அவை அரசியலே வேண்டாமென இருந்த நரசிம்மராவ், பிரதமராக இந்த அவையை அலங்கரித்தார் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் 3 மாநிலங்கள் பிரிக்கப்பட்டதை அனைவரும் கொண்டாடினார்கள்.

400 உறுப்பினர்களுடன் ஆட்சியில் இருந்த கட்சி இன்று எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது கொரோனாவின் போது சம்பளத்தில் 30 சதவீதத்தை உறுப்பினர்கள் நிதியாக அளித்தனர் வரலாறு, வருங்காலத்தையும் ஒன்றிணைத்து பார்க்க வேண்டிய தருணத்தில் உள்ளோம் அருமையான நினைவுகளோடு இந்த அவையில் உங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும் உங்கள் ஒத்துழைப்போடு புதிய நாடாளுமன்றத்திற்கு நாம் செல்லும்போது சிறப்பாக பணியாற்றுவோம் என நம்புகிறேன் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்ளும்போது, இதில் அரசியல் கலக்காமல் இருக்க வேண்டும்.

Tags: tamil news