X

பாராளுமன்றத்தில் எம்.பி-க்கள் வெளிப்படையாக பேச வேண்டும் – பிரதமர் மோடி பேச்சு

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த காலக்கட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சுதந்திர தின விழாவை கொண்டாடும் காலம் இதுவாகும். இந்த ஆகஸ்டு 15-ந் தேதி முக்கியத்துவம் வாய்ந்த நாள். அடுத்த 25 ஆண்டுகளில் நூற்றாண்டு சுதந்திர தின விழாவை கொண்டாட உள்ளோம்.

நமது பயணத்தையும், உயரத்தையும் நிர்ணயம் செய்து தீர்மானம் எடுக்க வேண்டிய நேரம் இதுவாகும். பாராளுமன்றத்தில் அனைத்து எம்.பி.க்களும் வெளிப்படையாக பேச வேண்டும். தேவைப்பட்டால் விவாதங்கள் நடத்த வேண்டும். அனைத்து எம்.பி.க்களும் சிந்தித்து விவாதங்களை மேற்கொண்டு முடிந்தவரை பயனுள்ளதாக மாற்ற வேண்டும்.

ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெறுவதால் இந்த கூட்டத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.