Tamilசெய்திகள்

பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட உள்ள திருத்த மசோதாக்கள் விபரம்

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 12 மாநிலங்களவை எம்.பி.க்கள் சஸ்பெண்ட் திரும்பப் பெறுதல், லக்கிம்பூர் விவகாரத்தில் மத்திய அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இருந்தாலும், அமளிக்கிடையில் மத்திய அரசு மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது.

இன்று பாராளுமன்ற மக்களவையில் பட்டய கணக்காளர்கள், செலவு மற்றும் பணி கணக்காளர்கள் மற்றும் நிறுவன செயலாளர்கள் திருத்த மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான தேர்தல் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்ற வாய்ப்புள்ளது.

அரசின் செலவினங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கக்கோரும் நிதி ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட உள்ளது.