Tamilசெய்திகள்

பாராகிளைடிங் சென்றவர்கள் ஆற்றில் விழுந்து பலி

தெலுங்கானா மாநிலம் கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஷா ரெட்டி (23). இவரும் இவரது வழிகாட்டியான சந்திப் குருங் (26) என்பவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிக்கிம்மிற்கு சுற்றுலா
சென்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை அங்குள்ள லாச்சுவ் வியூ பாயிண்ட்டில் இருந்து இருவரும் பாராகிளைடிங் செய்யும்போது பலத்த காற்று வீசியதாக தெரிகிறது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த
இருவரும் ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டனர்.

பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்ததை அடுத்து போலீசார் மற்றும் ராணுவத்தினர் இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து பெரும் சிரமத்திற்குப் பிறகு நேற்று மாலை இருவரின்
உடலும் மீட்கப்பட்டன.