”பாரத் மாதா கி ஜோ” முழக்கம் விவகாரம் – ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி கண்டனம்
ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல், 7-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி, அம்மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
சிகார் மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
காங்கிரசுக்கு ஒரு வாரிசு தலைவர் இருக்கிறார். அவர் எனக்கு ஒரு கட்டளை பிறப்பித்துள்ளார். எந்த கூட்டத்திலும், ‘பாரத் மாதா கி ஜே’ என்று மோடி தனது பேச்சை தொடங்கக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
இங்குள்ள மக்கள் முன்பு அந்த கட்டளையை நான் உடைக்கிறேன். ‘பாரத் மாதா கி ஜே’ என்று லட்சக்கணக் கானோர் முன்பு 10 தடவை சொல்வேன்.
எத்தனையோ சுதந்திர போராட்ட வீரர்கள், ‘பாரத் மாதா கி ஜே’ என்று சொல்லி மரணத்தை தழுவி உள்ளனர். அத்தகைய கோஷத்தை சொல்லக்கூடாது என்று கூறியதற்காக, ராகுல் காந்தி வெட்கப்பட வேண்டும். பாரத மாதாவை அவர் இழிவுபடுத்தி விட்டார்.
நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக் கும் காங்கிரசே காரணம். அக்கட்சியை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு ராஜஸ் தானில் நுழைய விடக்கூடாது. கற்பழிப்பு வழக்கில் சிறை சென்றவர்களின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி ‘சீட்’ கொடுத்துள்ளார்.
இவ்வாறு மோடி பேசினார்.
முன்னதாக, ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் மலாகேடா நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி ஒவ்வொரு கூட்டத்திலும் ‘பாரத் மாதா கி ஜே’ என்று சொல்கிறார். ஆனால், உண்மையில் அவர் அனில் அம்பானி போன்ற தொழில் அதிபர்களுக்காகத்தான் வேலை செய்கிறார்.
எனவே, அவர் ஒவ்வொரு கூட்டத்திலும் ‘அனில் அம்பானி கி ஜே’, ‘நிரவ் மோடி கி ஜே’, ‘மெகுல் சோக்சி கி ஜே’ என்று சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.