பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் மரணம்

பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களுள் ஒருவர் சுஷ்மா சுவராஜ். இவர் ஹரியான மாநிலத்தில் 1953-ம் ஆண்டு பிறந்தார்.

7 முறை மக்களவை முதல்வராக செயல் பட்டுள்ள சுஷ்மா ஸ்வராஜ், டெல்லி மாநில முதல்வராகவும் இருந்துள்ளார்.

2014 முதல் 2019 வரையிலான பாஜக ஆட்சியின் போது வெளியுறவுத்துறை அமைச்சராக சிறப்பாக செயல்பட்டு நாட்டு மக்களின் மத்தியில் நன்மதிப்பை பெற்றார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு இரண்டாவது பெண் வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற பெருமையை பெற்றவர் சுஷ்மா.

இந்நிலையில் கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிக்கிச்சை செய்து கொண்டார். தற்போது சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எம்ய்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுஷ்மா மாரடைப்பு காரணமாக தனது 67-வது வயதில் காலமானார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools